என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி"
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை பற்றி பேசியவை தவறானவையல்ல. தேச விடுதலைப்போராட்டத்தின் தந்தையான மகாத்மா காந்தியை கொடூரமாக கொலை செய்த நாதுராம் கோட்சேவை பற்றி பேசியவை தவறானவையல்ல. தேச விடுதலைப் போராட்டத்தின் தந்தையான மகாத்மா காந்தியை கொடூரமாக கொலை செய்த நாதுராம் கோட்சே ஒரு தீவிரவாதி என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
கமல்ஹாசன் பேசியதற்கு மாற்றுக்கருத்து உள்ளவர்கள் தங்களது கருத்தினை வெளியிட உரிமை உண்டு.
ஆனால், கமல்ஹாசனை மிரட்டுவதும், அவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டங்களில் வன்முறையை உருவாக்குவதும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது நாக்கை அறுக்க வேண்டுமென கூறுவதும், மன்னார்குடி ஜீயர் கமல்ஹாசனை நடமாட விட மாட்டோம் என தெரிவித்திருப்பதும் கருத்து சுதந்திரத்திற்கு விரோதமானதாகும். இத்தகைய போக்கினை அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் நாகர் கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த பின்னர் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடுகள் அதிகார வரம்பு மீறிய செயலாக உள்ளது என்று கோர்ட்டு கூறி உள்ளது. கடந்த 18-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்து முடிந்த பிறகு தேர்தல் விதி முறைக்கு மாறாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்குள் அதிகாரிகள் சென்று வந்து உள்ளனர். சில ஆவணங்களையும் அவர்கள் எடுத்துச் சென்று உள்ளனர். இதுதொடர்பாக அந்த மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்டு உள்ளார். அதேபோல கோவையில் இருந்து தேனிக்கு கொண்டு வரப்பட்டு உள்ள விவிபேடு எந்திரங்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இது மாநில தேர்தல் அதிகாரி சரியாக நடந்து கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது.
எனவே வருகிற 23-ந்தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் போது ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவரை மத்திய தேர்தல் கமிஷன் நியமிக்க வேண்டும்.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவேதான் சபாநாயகர், அ.தி.மு.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளார். தற்போது அந்த நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. உள்ளாட்சி தேர்தலை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டும். ஆனால் மாநில அரசு மேலும் 3 மாத காலம் அவகாசம் கேட்டிருப்பது ஏற்கத்தக்கது அல்ல. உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.
மத்தியில் மதசார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விருப்பம். ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிந்த பிறகு இது பற்றி முடிவு செய்யப்படும்.
தமிழகத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதை தீர்ப்பதற்கு மாநில அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் பணிபுரியும் 1700 ஆசிரியர்களுக்கு அவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற வில்லை என்பதற்காக சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளவர்கள் விடுதலை தொடர்பாக இதுவரையிலும் கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை-திருவனந்தபுரம் இரட்டை ரெயில் பாதை பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடந்து வருகிறது. அதனை விரைவுப்படுத்த வேண்டும். இந்தியா முழுவதும் எந்த மாநிலங்களை சேர்ந்தவர்களும் எங்கும் சென்றுவரலாம் என்ற நிலை உள்ளது. அதேசமயம் தமிழர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் எந்த நடவடிக்கைகளும் நடைபெறக்கூடாது இதற்கு மாநில அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும்.
புதுச்சேரி கவர்னர், புதுச்சேரி அரசுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் தவறு என்று ஐகோர்ட்டு கூறி உள்ளது. ஆனால் அதற்கு எதிராக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பது ஏற்கக்கூடியது அல்ல. புதுச்சேரி கவர்னர் உடனடியாக பதவி விலக வேண்டும். ஈரானில் இருந்து எண்ணை வாங்கக்கூடாது என்று அமெரிக்கா விதித்து உள்ள தடை இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த தடையை நாம் ஏற்கக்கூடாது.
குமரி மாவட்டத்தில் தனியார் வன பாதுகாப்பு சட்டம் கடுமையான பாதிப்புகளை மக்களுக்கு உருவாக்கி உள்ளது. சொந்த நிலத்தில் மரங்களை வெட்டுவதற்கு கூட அவர்களால் முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதுபோல நிலம் விற்கவோ, வாங்கவோ கலெக்டர் அனுமதி வேண்டும். எனவே அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தி.மு.க . வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து நேற்று மாலை புதியம்புத்தூரில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து தளமுத்துநகர், ஸ்பிக்நகர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது புதியம்புத்தூரில் பேசியதாவது:-
பாராளுமன்றம் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 22 தொகுதி காலியாக உள்ளது. தேர்தல் ஆணையம் 18 தொகுதிக்கு மட்டும் தான் தேர்தல் நடத்தியது. மீதி ஓட்டப்பிடாரம் உட்பட 4 தொகுதிக்கு தேர்தல் நடத்த மறுத்து விட்டார்கள். எடப்பாடி பழனிசாமி நிர்பந்தத்தின் காரணமாக தான் தேர்தல் ஆணையம் பாராளுமன்ற தேர்தலோடு அறிவிப்பு வெளியிடவில்லை. தேர்தலை நடத்தினால் வெற்றி பெற மாட்டோம் என எண்ணி தான் 4 தொகுதிகளிலும் தனியாக நடத்த வேண்டும் என்று சொன்னார்கள்.
தமிழ்நாட்டின் 2 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் குற்றவாளி போல் கை கட்டிக்கொண்டு உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வையுங்கள், நடத்த முடியாது என அதிகாரிகள் கூறுகிறார்கள். இன்னும் மூன்று மாத கால அவகாசம் கேட்கிறார்கள். எங்கு பார்த்தாலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளாட்சித் தேர்தல் நடத்தி இருந்தால் அந்த குடிநீர் பிரச்சினை மக்கள் பிரதிநிதி மூலம் நடவடிக்கை எடுத்து இருப்பார்கள்.
நடந்து முடிந்த 39 பாராளுமன்ற தேர்தலிலும், 18 இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. படுதோல்வி அடைய வாக்காளர்கள் எழுதி வைத்து விட்டார்கள். 23-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. அரசுக்கு முடிவு வந்துவிடும். தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நீடிக்க வேண்டுமா? முடிவு கட்டுங்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு.
ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்தால் தான் நியாயம் கிடைக்கும். கடந்த 30 ஆண்டுகளாக ஓட்டப்பிடாரத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதி மக்கள் ஆயத்த ஆடை தொழிலாளர்கள், தையல் தொழில் பயிற்சி, ஆயத்த ஆடை சந்தை கேட்டார்கள். ஆனால் கிடைக்கவில்லை. 30 ஆண்டுகாலம் புறக்கணிக்கப்பட்ட தொகுதியாக ஓட்டப்பிடாரம் இருந்து வருகிறது. தி.மு.க. வேட்பாளர் வெற்றிபெற்றால் புதியம் புத்தூரில் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நெல்லை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினரும், முன்னாள் மாநில செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடு முழுவதும் பாராளுமன்றத்துக்கு 2 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நாளை 3-வது கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தல், 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 19-ந்தேதி 4 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து தொகுதி ஓட்டு எண்ணிக்கையும் மே 23-ந்தேதி நடக்கிறது.
இதன் பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். மதுரையில் வாக்கு எண்ணிக்கை எந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குள் அரசு அதிகாரி ஒருவர் சென்று ஆவணங்களின் நகல் எடுத்துள்ளார். பின்னர் மீண்டும் அங்கு கொண்டு வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் பல மர்மங்கள் அடங்கியுள்ளன. இதுபற்றி உயர்மட்ட குழு விசாரணை நடத்த வேண்டும்.
தேர்தல் அதிகாரியான மதுரை கலெக்டர் விசாரணை நடத்துவது சரியாக இருக்காது. அவரை மாற்றி விட்டு வேறு அதிகாரியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை வெளியே வரும். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி சஸ்பெண்டு என்பது கண்துடைப்பு ஆகும். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையெனில் வழக்கு தொடருவோம். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் கண்டனத்துக்குரியது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். பிரதமர் மோடி பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக ஒவ்வொரு இடங்களிலும் மாற்றி மாற்றி பேசி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் பாஸ்கரன், செயற்குழு உறுப்பினர் பழனி, மாநில நிர்வாகிகள் கருமலையான், சாமுவேல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக லெனின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் உள்ள லெனின் சிலைக்கு ஜி.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். #gramakrishnan #marxistcommunist
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சிதம்பரம் நகரத்திலுள்ள மானாசந்து நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்குசாவடிக்கு வெளியே அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்குச்சாவடிகளில் போதிய வெளிச்சமின்மை, வாக்குப்பதிவு எந்திரத்தை பொருத்துவதில் தாமதம் ஆகிய குறைபாடுகள் உள்ளது.
தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சி வேட்பாளர், தலைவர்கள் வீடுகளில் சோதனை நடத்துவதில் காட்டும் அக்கறையை வாக்குச்சாவடிகளில் காட்டியிருந்தால் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்பட்டு இருக்காது. மதசார்பற்ற முற்போக்கு தலைமையிலான அணிகள் வெற்றி பெறும் நம்பிக்கை உள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறயிருப்பதாவது:-
கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி படுகொலை செய்துள்ள சம்பவம் மிகுந்த மன வேதனையளிக்கிறது. தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான பின்னணியில், அதே மாவட்டத்தில் மேலும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது இப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 25-ந்தேதி காணாமல் போன குழந்தை வீட்டுக்கு அருகிலேயே பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன.
சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்துள்ள இந்த கோரச் சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
குரூரமான இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது, போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #GirlHarassment
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
கம்யூனிஸ்டு ஆட்சி அங்கு அமைந்த பிறகு அரசியல் மோதல்கள் அதிகரித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஆகியவை இடையே நடைபெறும் அரசியல் மோதல்கள் பல இடங்களில் கொலையிலும் முடிந்துள்ளது.
இந்த நிலையில் சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த பிரச்சினையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் மோதல் உருவாகி உள்ளது. இது பல இடங்களில் வன்முறையாக வெடித்து வருகிறது.
திருவனந்தபுரம் அருகே காட்டாக்கடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணனின் வீடு உள்ளது. நேற்று இரவு அவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தங்கள் கைகளில் இருந்த பெட்ரோல் குண்டை ராமகிருஷ்ணன் வீட்டின் மீது வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதில் அவரது வீட்டு கதவு, ஜன்னலில் தீப்பிடித்து எரிந்தது.
சத்தம் கேட்டு வெளியில் வந்த ராமகிருஷ்ணன் பொதுமக்கள் உதவியுடன் தனது வீட்டில் பிடித்த தீயை அணைத்தார். மேலும் இதுபற்றி போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
கம்யூனிஸ்டு நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தகவல் கிடைத்ததும் கட்சி நிர்வாகிகளும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி கம்யூனிஸ்டு கட்சியினர் கூறும் போது சபரிமலை விவகாரத்தில் இந்த பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எங்கள் கட்சி நிர்வாகிகளை தாக்கி வருகிறார்கள். தற்போது பெட்ரோல் குண்டு வீச்சிலும் ஆர்.எஸ்.எஸ்.தான் ஈடுபட்டு உள்ளது என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள். #tamilnews
தேசிய மற்றும் மாநில கட்சிகள் ஆண்டுதோறும் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்துக்கு கணக்கு தெரிவிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் 2017-18ம் ஆண்டில் ஒவ்வொரு கட்சியும் எவ்வளவு வருவாய் பெற்றன என்ற விபரம் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. சமீபத்தில் தனது வருவாய் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது. அதில் 2017-18ம் ஆண்டு பா.ஜ.க.வுக்கு ரு.1000 கோடிக்கு வருமானம் கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
பாரதிய ஜனதாவுக்கு கிடைத்துள்ள வருமானத்தில் பெரும்பகுதி பங்குகள் வெளியிடப்பட்டு திரட்டப்பட்டுள்ளது. பங்குகள் வெளியிட்டதின் மூலம் மட்டும் பா.ஜ.க.வுக்கு பொதுத்துறை வங்கிகள் மூலம் 222 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
தேர்தல் பங்குகளை வெளியிட்டதின் மூலம் பாரதிய ஜனதா கட்சிக்கு ரூ.210 கோடி வந்துள்ளது.
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஆண்டு வருவாய் ரூ.262 கோடியில் இருந்து ரூ.291 கோடியாக அதிகரித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆண்டு வருவாய் ரூ.104 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தா மற்றும் கட்டணம் மூலம் இந்த வருவாய் கிடைத்து இருப்பதாக கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது. இந்த ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆண்டு வருவாய் 40 சதவீதம் குறைந்துள்ளது.
இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட 32 மாநில கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளின் ஆண்டு வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு 2017-18ம் ஆண்டில் எவ்வளவு பணம் கிடைத்தது என்று தெரியவில்லை. இன்னமும் காங்கிரஸ் கட்சி தனது ஆண்டு வருவாய் கணக்கை காட்டவில்லை. சரத்பவாரின் தேசியவாத காங்கிரசும் இன்னமும் கணக்கு காட்டவில்லை. #BJP #Congress
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்